Nagaratharonline.com
 
தைப்பூசம் : காரைக்குடி-பழனிக்கு சிறப்பு ரயில், கட்டணம் ரூபாய் 85/-  Jan 16, 16
 
ஜனவரி 23 ஆம் தேதி (சனிக்கிழமை) பழனியிலிருந்து பிற்பகல் 3.30 மணிக்குப் புறப்படும் இந்த ரயில், திண்டுக்கல், கொடைரோடு, மதுரை, மானாமதுரை, சிவகங்கை, தேவகோட்டை ரஸ்தா வழியாக காரைக்குடி ரயில் நிலையத்தை இரவு 9.30 மணிக்கு வந்தடைகிறது. மேற்குறிப்பட்ட ஊர்களில் இந்த ரயில் நின்று செல்லும்.

அதேபோல், ஜனவரி 24 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு காரைக்குடியிலிருந்து புறப்பட்டு அதே மார்க்கத்தில் செல்லும் ரயில், காலை 11 மணிக்கு பழனி சென்றடையும். அன்று பிற்பகல் 3.30 மணிக்கு பழனியில் இருந்து புறப்பட்டு இரவு 9.30 மணிக்கு காரைக்குடி வந்து சேரும்.