Nagaratharonline.com
 
செட்டிநாடு கட்டடங்களை காப்பாற்றிய நாட்டு ஓடுகள் : பாரம்பரியத்தை காக்க வேண்டும்  Jan 23, 16
 
செட்டிநாட்டின் பாரம்பரிய கட்டடங்களை கட்டிக்காத்து வந்த நாட்டு ஓடுகள், தற்போது வீதியில் தேடுவாரின்றி தூக்கி வீசப் படுகிறது. பழமை மாறி வரும் வீடு களை பராமரிக்க சுற்றுலாத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

"திரைகடல் ஓடியும் திரவியம் தேடு' என்ற பொன்மொழிக்கேற்ப வணிகத்திற்காக பர்மா, மலேசியா, சிங்கப்பூர் சென்று பொருள் ஈட்டிய தோடு, அச்செல்வத்தில் செட்டி நாட்டில் பாரம்பரிய கட்டடங்களை கட்டினர்.

பாரம்பரிய பங்களாசெவ்வக வடிவ கட்டடம், விசாலமான தெரு, கோயில், குளங்கள் என நகர நிர்மாணத்தில் நிகரற்று விளங்கினர். பல ஊர்களில் பாரம்பரிய வீட்டு அமைப்புகள் மாறி விட்டன. ஆனால், செட்டி நாடு வீடுகள் காலத்தை வென்று கம்பீரமாக காட்சிஅளிக்கின்றன. எவ்வித சாலை போக்குவரத்து வசதி யும் இல்லாத காலத்தில், பர்மா, மலேசியாவிலிருந்து தேக்கு மரங் களையும், இத்தாலியில் இருந்து கிரானைட் தூண்களையும், டைல்ஸ்களையும், பெல்ஜியத்தி லிருந்து கண்ணாடிகளையும் கொண்டு வந்து பங்களாக்களை உருவாக்கினர்.
செம்பிரான் கற்களை கொண்ட அஸ்திவாரம், வெள்ளை கற்களால் ஆன முற்றம், மேற்கூரை தேக்கு மரப்பலகையால் செய்யப்பட்டு அதன் மேல் நாட்டு ஓடுகள் வேயப்பட்டிருக்கும். இந்த நாட்டு ஓடுகள் கோடை காலங்களில் குளிர்ச்சியையும், குளிர்காலத்தில் வெதுவெதுப்பையும் தரும்.

சேதமாகும் நாட்டு ஓடுகள்உலகில் எந்தெந்த நாடுகளில் இருந்து பொருட்களை கொண்டு வந்து கட்டடம் கட்டினார்களோ, அந்த நாடுகளுக்கே புராதன சின்னங்கள் என்ற பெயரில் திரும்ப செல்கின்றன. நவீனத்தின் வளர்ச்சி ஒருபுறம் இருக்க, கோட்டையூர், பள்ளத்தூர், கானாடுகாத்தானில் திரியும் குரங்குகள், நாட்டு ஓடுகளை சேதமாக்கிவருகின்றன. குறிப்பாக ஆட்கள் இல்லாத வீடுகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்கின்றன. இதனால், வேறு வழியின்றி வீட்டின் உரிமையாளர்கள் நாட்டு ஓடுகளை எடுத்து விட்டு, கான்கிரீட் கட்டடங் களாக மாற்றி வருகின்றனர். கட்ட டத்தின் பாரம்பரியம் குறைகிறது.

கானாடுகாத்தான் சுப்பிரமணியன் கூறுகையில்,"" கானாடுகாத்தானில் உள்ள பாரம்பரிய வீடுகளை பார்க்க வெளிநாட்டினர் வருகின்றனர். தற்போது 10 சதவீத வீடுகளே முறையாக பராமரிக்கப்பட்டு வருகின்றன. இருக்கும் வீடுகளின் மேற்கூரைகளை குரங்குகள் சேதப்படுத்தி வருகிறது.
பாரம்பரியம் காக்கும் விதத்தில் மத்திய, மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.