Nagaratharonline.com
 
NEWS REPORT: பிள்ளையார்பட்டி தல மகிமை நூல் வெளியீடு  Aug 3, 16
 
எழுத்தாளர் எஸ்.எல்.எஸ். பழனியப்பன் எழுதிய பிள்ளையார்பட்டி தல மகிமையும் விநாயகர் வழிபாடும், பலன்களும் என்ற நூல் வெளியிடப்பட்டது.

வயிரவன்பட்டி வயிரவர் திருக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, திருக்கோயில் தலைவர் ஏ.வி.கே.எம்.காசிநாதன் செட்டியார் தலைமை வகித்தார். செயலர் வெ.ரெங்கநாதன் செட்டியார், பிள்ளையார்பட்டி பிச்சைக்குருக்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முனைவர் மா.சிதம்பரம் நூலினை வெளியிட, பிள்ளையார்பட்டி கோயில் அறங்காவலர்கள் எம்.தண்ணீர்மலைச் செட்டியார், வி.ராமநாதன் செட்டியார் ஆகியோர் பெற்று கொண்டனர். விழா முடிவில் நூலாசிரியர் எஸ்.எல்.எஸ்.பழனியப்பன் நன்றி கூறினார்.