|
மூன்று குறுவட்டங்களை உள்ளடக்கிய சிங்கம்புணரி புதிய தாலுகா Sep 27, 16 |
|
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா 3 குறுவட்டங்களை உள்ளடக்கிய புதிய தாலுகாவாக உதயமாக உள்ளது.
அண்மையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா சிங்கம்புணரியை புதிய தாலுகா உருவாக்கப்படும் என உத்தரவிட்டார். இதில், சிங்கம்புணரி, எஸ்.புதூர் மற்றும் எஸ்.எஸ்.கோட்டை ஆகிய 3 குறுவட்டங்களை உள்ளடக்கியுள்ளது.
மேலும் தாலுகாவில் சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 30 ஊராட்சிகள், எஸ்.புதூர் ஊராட்சியில் உள்ள 21 ஊராட்சிகள் மற்றும் சிங்கம்புணரி பேரூராட்சி ஆகியவை அமைய உள்ளன.
சிங்கம்புணரி தாலுகாவில் பாரி ஆண்ட பறம்பு மலை என்ற பிரான்மலை மற்றும் முக்கிய திருக்கோவில் அமைந்துள்ள எஸ்.வி.மங்கலம், மு.சூரக்குடி, மருதிப்பட்டி, முறையூர், எஸ்.எஸ்.கோட்டை, பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள வேட்டங்குடிப்பட்டி மற்றும் எஸ்.புதூர் ஒன்றியத்தில் புழுதிபட்டி, செட்டிகுறிச்சி, முசுண்டபட்டி, உலகம்பட்டி, வாராப்பூர், கிழவயல் என முக்கிய கிராமங்கள் அமைந்துள்ளன. |
|
|
|
|
|