Nagaratharonline.com
 
காரைக்குடியில் அஞ்சல்துறை சார்பில் அக்.23-இல் கடிதம் எழுதும் போட்டி  Sep 27, 16
 
பள்ளி மாணவர்களிடையே கடிதம் எழுதும் பழக்கத்தை ஊக்கப்படுத்தும் வகையில் இந்திய அஞ்சல்துறை சார்பில் காரைக்குடியில் கடிதம் எழுதும் போட்டி அக்டோபர் 23-இல் நடத்தப்படுகிறது.

காரைக்குடி அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளர் வே. மாரியப்பன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கடிதம் எழுதும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் கடிதம் எழுதும் போட்டி அக்டோபர் 23-இல் காரைக்குடி மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் நடத்தப்படுகிறது.
இந்தியாவின் பலமே வேற்றுமையில் ஒற்றுமை என்ற தலைப்பில் இப்போட்டி நடை பெறும். 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாண, மாணவியர்கள் இதில் பங்கேற்கலாம். போட்டியில் பங்கேற்க விரும்பு மாணவ, மாணவியர்கள் தங்கள் பள்ளியின் தலைமையாசிரியர்கள் மூலம் தங்களின் பெயரை அஞ்சல் கண்காணிப்பாளர் அலுவலகம், காரைக்குடி அஞ்சல் கோட்டம், காரைக்குடி - 3 என்ற முகவரியில் பதிவு செய்து கொள்ளவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.