Nagaratharonline.com
 
செட்டிநாட்டின் சில்வர் பாத்திரம் உற்பத்தி - அழிவை நோக்கி செல்கிறது  Oct 5, 16
 
செட்டிநாட்டின் சிறப்பு வாய்ந்த பொருட்களுள் ஒன்றாக திகழ்வது சில்வர் பாத்திரங்கள். 15 ஆண்டுக்கு முன்பு வரை சிறியதும் பெரியதுமாக காரைக்குடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நுாறுக்கும் மேற்பட்ட பட்டறைகள் இயங்கி வந்தது. சீர் வரிசையில் அடுக்கு பாத்திரங்களே பிரதான இடத்தை பெற்றிருக்கும். துாக்கு, வாளி, சம்படம், சொருகு ஆகியவை 26 கேஜ் கனத்திலும், பால் கேன் ஆகியவை 22 கேஜ் கனத்திலும் செய்யப்பட்டன.


திருமண சீர்வரிசைக்கு பாத்திரங்களை அடுக்கி வைத்த நிலை மாறி, அந்த இடத்தை, பிளாஸ்டிக், பீங்கான், எலக்ட்ரானிக் பொருட்கள் ஆக்கிரமித்து விட்டன. இதனால், எவர்சில்வர் பாத்திரங்களின் நுகர்வு குறைந்து வருகிறது. தொழிலாளர்கள் பற்றாக்குறையும், இத்தொழிலுக்கு, பெரும் சவாலாக உள்ளது. இதுபோன்ற பிரச்னைகளால் சில்வர் பாத்திர உற்பத்தியானது தேய்ந்து வருகிறது.

தற்போது தகடு ஒரு கிலோ ரூ.140-க்கு வாங்கப்பட்டு, பாத்திரங்களாக ரூ.350 வரை விற்கப்படுகிறது. சில்வர் கொட்டான், அடுக்கு, சொருகு, அடுக்கு வாளி ஆகியவற்றை நகரத்தார் இன்றும் விரும்பி வாங்குகின்றனர். செட்டிநாடு சில்வர் பாத்திரங்கள் கையினால் செய்யப்படுவதால் பினிஷிங் நன்றாக இருக்கும். இளைஞர்கள் இதில் நாட்டம் கொள்வதில்லை. முன்பு தீபாவளிக்கென்று ஆர்டர் மூலம் சில்வர் பாத்திர உற்பத்தி நடக்கும். தற்போது வழக்கமான உற்பத்தியே நடக்கிறது, என்றார்.


தீர்வு: ஒரு புறம் பாரம்பரிய பொருட்கள் பல லட்சம் செலவழித்து காட்சி படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், மறுபுறமோ நாம் பல ஆண்டுகாலம் பயன்படுத்தும் பொருட்கள் தயாரிப்பு தொழில் நம் கண்முன்னே அழிந்து வருகிறது. இவற்றை அழிவிலிருந்து காப்பாற்றுவது தொழில் துறையின் கடமை. ஆனால், முகாம் நடத்தும் அதிகாரிகள் இது போன்ற முன்னேற்றமுள்ள தொழில்களை ஊக்குவிப்பதில்லை. புதிய தொழில்களை தேடாமல், இருக்கின்ற தொழில்களை ஊக்குவிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?----------