Nagaratharonline.com
 
கண்டவராயன்பட்டியில் கந்த சஷ்டி விழா  Nov 5, 16
 
கண்டவராயன்பட்டியில் அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழாவையொட்டி அருள்மிகு வலம்புரி விநாயகருக்கும், அருள்திரு தண்டாயுதபாணிக்கும் சனிக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை சிறப்பு அபிஷேகமும் லட்சார்ச்சனையும் நடைபெற்றன.

ஈரோடு நகரத்தார் சங்கத் தலைவர் என்.எஸ்.எஸ்.சிவசுப்பிரமணியம் தலைமை வகிக்க ஆன்மிக சொற்பொழிவு நடைபெற்றது.
கோவிலூர் மடாலய கல்வி நிறுவன பேராசிரியர் செ.குமரப்பன் தொடக்கவுரையாற்றினார். தொடர்ந்து கந்தபுராணம் என்ற தலைப்பில் பொற்கிளி கவிஞர் அரு.சோமசுந்தரம் சிறப்புரையாற்றினார். முருகன் அடிகளார் பழ.பழனியப்பன் ஆசியுரை வழங்கினர். பின்னர் ஐந்து எஜமானர்கள் என்ற தலைப்பில் மு.ராமநாதன் ஆன்மிக உரையாற்றினார்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை நடப்பு காரியக்காரர் மா.தேனப்பன்அபிராமி மற்றும் தெ.சி.நா.குடும்பத்தினர் செய்திருந்தனர்.