|
துபாயில் நகரத்தார் வர்த்தக மாநாடு : விழிப்புணர்வு கருத்தரங்கு Nov 13, 16 |
|
வேலை செய்ய விரும்பும் நகரத்தார் இளைய சமூகத்தினரை தொழில் தொடங்கி தொழில் முனைவோராக மாற்றும் வகையில் ஊக்குவிப்பு வர்த்தக மாநாடு 2017-ல் ஏப்.14 முதல் 16 வரை துபாயில் நடக்கிறது.
அதற்கு முன்னோட்டமான விழிப்புணர்வு கருத்தரங்கு கோவிலுாரில் நடந்தது. கோவிலுார் ஆதீனம் மெய்யப்ப சுவாமிகள் தலைமை வகித்தார். வர்த்தக கூட்டமைப்பு தலைவர் சொக்கலிங்கம் பேசியதாவது:
நம் முன்னோர்கள் போலவே, தற்போதைய நகரத்தார் சமூகத்தை சேர்ந்த இளைய தலைமுறையினர் தொழில் தொடங்கி பலருக்கு வேலை வாய்ப்பை வழங்கும் வகையில் உருவாக வேண்டும். தற்போதுள்ள சூழ்நிலையில், நாம் வசிக்கும் மாநிலத்தில், ஊரில் தொழில் தொடங்கி தொழில் முனைவோராக வர வேண்டும். தொழில் துவங்குவதற்கான ஆலோசனைகள், நிதி உதவி, சட்ட உதவி உள்ளிட்டவை இந்த கூட்டமைப்பு மூலம் ஏற்படுத்தி தரப்படும், என்றார்.
ஒருங்கிணைப்பு குழு தலைவர் அழ.முருகப்பன் வரவேற்றார். ஞானசம்பந்தம், சிதம்பரம், கோவிலுார் மடாலய மக்கள் தொடர்பு அலுவலர் குமரப்பன், பட்டிமன்ற பேச்சாளர் கண.சிற்சபேசன், தொழில் வணிக கழக தலைவர் முத்து பழனியப்பன், இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஒய்.பழனியப்பன், தேவகோட்டை நகரத்தார் பள்ளி செயலாளர் ராமனாதன் பங்கேற்றனர். |
|
|
|
|
|