Nagaratharonline.com
 
நெற்குப்பை நடமாடும் மருத்துவ குழுவினர் மூலம் சிறுமிக்கு இருதய நோய் கண்டுபிடிப்பு  Nov 13, 16
 
நெற்குப்பை நடமாடும் மருத்துவ குழுவினர் சிறுமிக்கு இருதய நோய் இருப்பதை கண்டறிந்து சிகிச்சைக்கு பரிந்துரைத்துள்ளனர்.
நடமாடும் சுகாதாரக் குழுவினர் கிராமங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தி வருகின்றனர். நோய் குறித்த கிராம மக்களின் அறியாமையினை போக்க பரிசோதனை மேற்கொண்டு நோய் கண்டுபிடிப்பு மற்றும் ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். இதன் அடிப்படையில் மருத்துவர் அருண்குமார் மணமேல்பட்டி என்ற கிராமத்தில் மருத்துவ முகாமினை மேற்கொண்டபோது அவ்வூரைச்சேர்ந்த காளிதாஸ்- ஸ்ரீதேவி தம்பதியரின் மகள் கனிஸ்கா(6)விற்கு அடிக்கடி மூச்சுத் திணறல் இருப்பதாக கூறியதால் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது அச்சிறுமிக்கு தீவிர இருதய நோய் இருப்பது கண்டறியப்பட்டு மேல் சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
இதையடுத்து தனியார் மருத்துவமனையில் சிறுமிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு பேஸ்மேக்கர் என்னும் கருவி பொருத்தப்பட்டது. சிறுமிக்கு இருதய நோய் பாதிப்பு சீரடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.