|
கண்டவராயன்பட்டியில் குரங்குகள் தொல்லை Dec 24, 16 |
|
கண்டவராயன்பட்டியில் கடந்த சில மாதங்களாக குரங்குகள் வீடுகளில் புகுந்து உணவுகளை திருடுவது வழக்கமாகி விட்டது.
இப்பகுதியினர் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். அப்பகுதியைச் சேர்ந்த சுப்பையா கூறுகையில், 'கடந்த ஓராண்டில் இங்கு 100க்கும் மேற்பட்ட குரங்குகள் அதிகரித்து விட்டது. பல முறை ஊராட்சியில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை' என்றார்.
குடியிருப்பு பகுதிகளில் குரங்குகள் பிடிப்பவர்கள் வனப்பகுதியில் குரங்குகளை விடாமல், வேறு குடியிருப்பு பகுதியில் விட்டுச் செல்வதால் தற்போது கண்டவராயன்பட்டி, கீழச்சிவல்பட்டி, திருப்புத்துார், மாம்பட்டி உள்ளிட்ட பல ஊர்களில் குரங்குப் பிரச்னை அதிகரித்து வருகிறது.
குரங்குகளை பிடிப்பவர்கள் வனப்பகுதியில் மட்டுமே விட வனத்துறையினர் அறிவுறுத்த வேண்டியது அவசியமானது. |
|
|
|
|
|