|
கோவிலூர் செட்டிநாடு அருங்காட்சியகத்தை மாற்றுத்திறனாளிகள் பார்வையிட்டனர் Jan 5, 17 |
|
உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி கல்லல் ஒன்றியம் அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வளமையத்தின் கீழ் இயங்கி வரும் மையங்களைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர்கள் கோவிலூர் மடாலயத்தில் செயல்பட்டு வரும் செட்டிநாடு அருங்காட்சியகத்தைப் புதன்கிழமை பார்வையிட்டனர்.
கல்லல், கோவிலூர், வைரவன்பட்டி, தளக்காவூர், மானகிரி ஆகிய ஊர்களில் செயல் பட்டு வரும் பகல் நேர பராமரிப்பு மையத்தில் பயிலும் 6 முதல் 14 வயதுடைய 35 பேர் அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டனர். மனநலம் குன்றிய, செவித்திறன் குறைந்த மாணவ, மாணவியர் அதிக அளவில் வந்திருந்தனர்.
செட்டிநாட்டு அருங்காட்சியகம், திருநெல்லையம்மன் கோயில், நாச்சியப்பசுவாமிகள் கலை அறிவியல் கல்லூரியில் உள்ள படப்பிடிப்பு நிலையம், ஒலிப்பதிவுக்கூடம் ஆகிய வற்றை அவர்கள் பார்வையிட்டனர். அப்போது கல்லூரியின் தகவல் ஊடகத்துறை சார்பில் குறும்படம் திரையிடப்பட்டது.
கோவிலூர் மடாலய மக்கள் தொடர்பு அலுவலர் குமரப்பன் அருங்காட்சியகப் பொருட்களை விளக்கி கூறினார். |
|
|
|
|
|