|
NEWS REPORT: சிலிண்டருக்கான கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தினால் ரூ.5 தள்ளுபடி: எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு Jan 5, 17 |
|
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''சமையல் எரிவாயு சிலிண்டரை ஆன்லைனில் முன்பதிவு செய்து, கட்டணமும் செலுத்தினால் ரூ. 5 தள்ளுபடி செய்யப்படும்.
வாடிக்கையாளர்கள் நெட் பேங்கிங், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் ஆன்லைனில் பணத்தைச் செலுத்தி முன்பதிவு செய்துகொள்ளலாம்.
இதன்மூலம் தள்ளுபடி செய்யப்பட்ட தொகை திரையில் தெரியும். அந்த 5 ரூபாயைக் கழித்த பின்னர் மீதத்தொகையைச் செலுத்த வேண்டும்.
தள்ளுபடி செய்யப்பட்ட தொகை வீட்டில் சிலிண்டர் விநியோகிக்கப்படும்போது அளிக்கப்படும் ரசீதிலும் இருக்கும்''. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நாட்டு மக்கள் ரொக்க பணப் பரிமாற்றத்தைக் குறைத்துக் கொண்டு மின்னணு முறைக்கு மாற வேண்டும் என்ற நோக்கில் இத்தகைய சலுகைகள் அறிவிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. |
|
|
|
|
|