|
NEWS REPORT: சென்னை வாழ் நெற்குப்பை நகரத்தார் சங்கம், 25 ம் ஆண்டு வெள்ளி விழா Jan 10, 17 |
|
|
|
சென்னை வாழ் நெற்குப்பை நகரத்தார் சங்கம், ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரு நாட்களில் 25 ம் ஆண்டு விழாவையும் வெள்ளி விழாவையும் ஒருசேர சென்னையில் மயிலாப்பூர் வித்யா பாரதி திருமண மண்டபத்தில் வெகு சிறப்பாக கொண்டாடியது. உள்ளூர் நகரத்தார் பெருமக்களும்
அயலூர் நகரத்தார் பெருமக்களும் உறுப்பினர்கள் குடும்பத்துடன் இரு நாட்களிலும் இணைந்து, பங்கேற்று மகிழ்ந்தனர் .
07/01/2017 அன்று நடைபெற்ற 25 ம் ஆண்டு விழாவிற்கு, VS மருத்துவமனை தலைவர் Dr.S. சுப்பிரமணியன் தலைமையுரை ஆற்றினார் . முன்னதாக சங்கத்தின் தலைவர் இராம்குமார் சிங்காரம் வரவேற்க, பொருளாளர் இராம. லெட்சுமணன் நிதி நிலை அறிக்கை வாசிக்க , ஆற்றல் மிகு செயலாளர் மு.ச. செல்வநாதன் சங்கத்தின் செயல்பாடுகளை விவரித்தார். JBAS மகளிர் கல்லூரி தமிழ் பேராசிரியர் முனைவர் பர்வீன் சுல்தானா "உறவுகள் மேம்பட " என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். "வந்தார்கள் வென்றார்கள்" என்ற தலைப்பில் செட்டிநாடு ஹௌசிங் பிரமோட்டர்ஸ் தலைவர் S. முத்துப்பழனியப்பன், செந்தூரான் குழும கல்வி நிறுவனங்கள் தலைவர் RM. வயிரவன் மற்றும் ஜி ஐ ரீடையில் மேலாண் இயக்குனர் இராமு அண்ணாமலை இராமசாமி ஆகியோர் தங்கள் கடந்து வந்த வழிகளை உதாரணம் காட்டி உரையாற்றினர். மதியம் குழந்தைகளின் தனித்திறன் நிகழ்ச்சி, 2017-19 ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் வழக்கம் போல ஏகமனதாக தேர்வு, இணைய தளம் தொடக்கம், உறுப்பினர் முகவரி கையேடு வெளியீடு, ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முன்னாள் மத்திய மாநில அமைச்சர் , திருமயம் சட்டமன்ற உறுப்பினர் S.ரகுபதி மற்றும் முத்து பார்மா குழும நிறுவனங்கள் மேலாண் இயக்குனர் இ. ஞானம் ஆகியோர் சிறப்புரை ஆற்றி, நன்கொடையாளர்களுக்கு விருதுகள் வழங்கினர்.
பிறகு "குறையொன்றும் இல்லாத கோவிந்தன்" என்ற தலைப்பில் தாமல்.S. ராமகிருஷ்ணன் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றினார் . துணைத்தலைவர் ப பனையப்பன் நன்றி கூற, ஆண்டுவிழா நிறைவுற்றது.
08/01/2017 அன்று நடைபெற்ற 25 ம் ஆண்டு வெள்ளி விழாவிற்கு, வெள்ளி விழாக் குழுத் தலைவர், க. தியாகராஜன் வரவேற்க, வெள்ளி விழாக் குழு செயலாளர் பழ. வயிரவன் கல்விநிதி அறிக்கை வாசிக்க, மதுரை மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் ஆலய தக்கார், கருமுத்து கண்ணன் தலைமையுரை ஆற்ற, Madras Medical College Vice Principal Dr. சுதா சேஷய்யன், "மரபும் மாண்பும்" என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார் . சொல்வேந்தர் சுகிசிவம் பட்டி மன்ற நடுவராகப் பொறுப்பேற்று நகைச்சுவை பட்டிமன்றம் நடத்தினார். காசி நாட்டுக்கோட்டை நகர சத்திர மேலாண்மை கழக நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா, குட்டீஸ் கலாட்டா, ஆச்சிமார்களின் அசத்தல் நிகழ்ச்சி, நகரத்தார்களுக்கான தொழில் வாய்ய்புக்கள் பற்றி சிறப்புரை, செட்டிநாடு குழும மேலாண் இயக்குனர்,M.A.M.R. முத்தையா என்ற ஐயப்பன் வாழ்த்துரை, சோம. வள்ளியப்பன் சிறப்புரை, The Girls Orchestra நடத்திய கரோக்கி இசை நிகழ்ச்சிக்குப்பின், வெள்ளி விழாக் குழு பொருளாளர், அரு. கணபதி நன்றி கூறினார்.
காலை முதல் இரவு வரை இரு நாட்களிலும், இன்சுவை விருந்து நடைபெற்றது |
|
|
|
|
|