Nagaratharonline.com
 
நெற்குப்பை அருகே ஒழுகமங்கலத்தில் மஞ்சுவிரட்டு  Jan 23, 17
 
ஒழுகமங்கலத்தில் 22/01/2017 அன்று மஞ்சுவிரட்டு நடத்த கிராமமக்கள் முடிவு செய்துனர். இதுகுறித்து 'வாட்ஸ்ஆப்' மூலம் காளை வளர்ப்போர், மாடுபிடி வீரர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து 22/01/2017 காலை 100 க்கும் மேற்பட்ட காளைகள் ஒழுகமங்கத்திற்கு அழைத்து வரப்பட்டு மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டன. இதில் 50க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும், ஏராளமான மஞ்சுவிரட்டு ஆர்வலர்களும் பங்கேற்றனர்.