|
மாத்தூர் கோயில் தேர் திருவிழா Mar 10, 17 |
|
மாத்துார் பெரியநாயகி அம்பிகை உடனுறை ஐந்நுாற்றீஸ்வரர் கோயில் திருவிழா கடந்த 2-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் சுவாமி, அம்பாள் ரிஷப, அன்ன, சிம்ம, கிளி வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தார்.
கடந்த 6-ம் தேதி திருக்கல்யாணம், நேற்று காலை 10:00 மணிக்கு சுவாமி தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி,மாலை 4:40 மணிக்கு தேரோட்டம் நடந்தது.இன்று காலை 12:00 மணிக்கு தீர்த்தவாரி,நாளை உற்சவ சாந்தி நடக்கிறது. ஏற்பாடுகளை மாத்துார் கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். |
|
|
|
|
|