|
பத்திரப் பதிவு அனுமதி தற்காலிகமே: உயர் நீதிமன்றம் உத்தரவு Apr 11, 17 |
|
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ’’அங்கீகாரமற்ற விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்ற கடந்த செப்டம்பர் 9-ம் தேதி உயர் நீதிமன்றம் விதித்த தடையில் நாங்கள் சிறு மாற்றம் செய்கிறோம். அதன்படி, தமிழக அரசு பத்திரப் பதிவு சட்டப்பிரிவு 22(ஏ) - வில் கொண்டு வந்துள்ள சட்ட திருத்தங்களின்படி, கடந்த 2016 அக்டோபர் 20-ம் தேதிக்கு முன்பாக விற்பனை செய்யப்பட்ட அங்கீகாரமற்ற வீட்டு மனைகளை மறு விற்பனை செய்ய எந்த தடையும் இல்லை.
அதேநேரம், இந்த தேதிக்குப் பிறகு விற்பனை செய்யப்பட்ட அங்கீகாரமற்ற நிலங்களை எக்காரணம் கொண்டும் மறு விற்பனை செய்யக்கூடாது. அரசு புதிதாக வகுக்கும் கொள்கை முடிவைப் பொருத்தே அதுதொடர் பாக முடிவு செய்யப்படும். இந்த கொள்கை முடிவை வரும் ஏப்ரல் 11-ம் தேதிக்குள் அரசு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்’’ என்று உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில் இன்று(செவ்வாய்க்கிழமை) வெளியான உத்தரவு நகலில் பத்திர பதிவு அனுமதி என்பது வழக்கின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டதே என்று கூறப்பட்டுள்ளது. இது வீட்டு மனை விற்பனையாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. |
|
|
|
|
|