|
NEWS REPORT: அமெரிக்காவுக்குச் சுற்றுலா செல்ல விரும்புவோர் விசா தொடர்பாக அறிந்துகொள்ள வேண்டியவை May 21, 17 |
|
பாஸ்போர்ட் வைத்திருக்கும் இந்தியர்கள் 10 ஆண்டுக் காலம் செல்லத்தக்க சுற்றுலா விசாவுக்கு விண்ணப்பிக்கலாம். இது B1/B2 விசா எனப்படும். ஒவ்வொரு முறை அமெரிக்கா செல்லும்போதும் அதிகபட்சமாக 6 மாதம் தங்கலாம். இந்த விசாவில் செல்லும் நபர் அமெரிக்காவில் வேலை பார்க்க முடியாது.
அமெரிக்கச் சுற்றுலா விசா B1/B2 எனப்படும். இதற்கென்று குறித்த ஆவணம் என்று ஏதுமில்லை. ஆனால், விசா அதிகாரி இந்தியாவுக்கும் உங்களுக்குமான பிணைப்புகளையும் அமெரிக்கா சென்றுவிட்டுத் தாயகம் திரும்பும் உறுதியுடன் இருக்கிறீர்களா என்பதையும் உரிய ஆதாரங்களுடன் எடுத்துரைக்குமாறு கேட்கலாம். உங்கள் நிலையை விளக்கச் சில ஆவணங்கள் உதவும் என்று கருதினால், நீங்கள் அவற்றை விசா நேர்காணலின்போது எடுத்து வரலாம்.
உங்கள் விசா காலாவதியாகி 12 மாதங்களுக்கு மேலாகிவிட்டால், நீங்கள் மறுபடியும் விசாவுக்கு விண்ணப்பித்து நேர்காணலுக்கு வரவேண்டும். உங்களுக்கு 80 வயதுக்கு மேல் என்றால், நேர்காணலற்ற பரிசீலனைக்கு நீங்கள் தகுதியுடையவர்.
உங்கள் விசா “H1B” அல்லது “B1” எனில், தொழில்/வர்த்தகம் நிமித்தமாக மட்டுமே பயணம் செய்ய முடியும். அதுபோல, “B2” விசா மூலம் சுற்றுலாவுக்காக மட்டுமே பயணம் மேற்கொள்ள முடியும். விசாவில் “B1/B2” என்று குறிப்பிட்டிருப்பின் இரண்டில் எதற்கு வேண்டுமானாலும் பயணம் செய்யலாம். ஆனால், H1B அல்லது வேலை சார்ந்த வேறு விசாவை வைத்துக்கொண்டு சுற்றுலாப் பயணியாக அமெரிக்காவுக்குச் செல்ல முடியாது. குடும்பத்தினர் ஒவ்வொருவரும் சுற்றுலா விசாவுக்கு (பொதுவாக நாங்கள் பரிந்துரைப்பது B1/B2) விண்ணப்பிப்பது அவசியம்.
நன்றி : தி ஹிந்து |
|
|
|
|
|