|
கண்டவராயன்பட்டி : தாசில்தார் மீது டிராக்டர் ஏற்றி கொல்ல முயற்சி Apr 24, 10 |
|
சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே வேலங்குடி கண்மாயில், மணல் திருட்டை பிடித்த பெண் தாசில்தாரை, டிராக்டர் ஏற்றி கொல்ல முயற்சி நடந்தது.
இக்கண்மாயில் தாசில்தார் விஜயராணி நேற்று, திடீர் சோதனை நடத்தினார். வருவாய் ஆய்வாளர் சுப்பிரமணியன், வி.ஏ.ஓ., காசிலிங்கம், தலையாரி நடராஜ், உதவியாளர் காமராஜ் உடன் சென்றனர். டிராக்டரில் மணல் அள்ளி கொண்டிருந்த டிரைவர் ஆறுமுகத்தை (50), வருவாய் துறை ஊழியர்கள் பிடித்தனர். ஊராட்சி தலைவரின் டிராக்டர் என்பதும், மணல் திருடியதும் தெரிந்தது. டிராக்டரை வருவாய் துறையினர் கைப்பற்றினர். அதை ஆறுமுகத்தை ஓட்டி வருமாறு கூறி, 'ஜீப்' ல் பின் தொடர்ந்தனர். அப்போது பைக்கில் வந்த அப்துல் சலாம் (35) என்பவர், டிராக்டரை ஓட்டி வருவதாக கூறினார். ஆறுமுகம், பைக்கை எடுத்து கொண்டார்.
திடீரென, சுண்டக்காடு கண்மாயில் டிராக்டரை இறக்கி, அப்துல் சலாம் தப்ப முயன்றார். வருவாய் துறையினர் 'ஜீப்' ல் விரட்டினர். 'ஜீப்' மீது டிராக்டரை மோதி, அவர் தப்பினார். ஆறுமுகமும் தப்பி சென்றார். 'ஜீப்' லேசான சேதம் அடைந்தது. கண்டவராயன்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
source : Dinamalar |
|
|
|
|
|