|
காரைக்குடி தியேட்டர்களில் ஒரே வகுப்பு, ஒரே கட்டணம் Jul 7, 17 |
|
நாடு முழுவதும் ஜூலை 1ல் அமலுக்கு வந்த ஜி.எஸ்.டி., நடைமுறையின்படி, தமிழகத்தில் 100 ரூபாய் வரையிலான சினிமா டிக்கெட்டுக்கு 18 சதவீதம், அதற்கு மேலான டிக்கெட்டுக்கு 28 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.
இது தவிர உள்ளாட்சிகள் மூலம் 30 சதவீதம் கேளிக்கை வரி விதிக்கப்பட்டுள்ளது. கேளிக்கை வரியை ரத்து செய்ய கோரி தியேட்டர்கள் நான்கு நாட்கள் மூடப்பட்டது.
தமிழக அரசு சார்பில் குழு அமைக்கப்படும் என கூறியதை தொடர்ந்து நேற்று முதல் மீண்டும் செயல்பட தொடங்கியது.
ஜி.எஸ்.டி., நடைமுறைக்கு பின் பாண்டியன், சத்தியன், நடராஜா தியேட்டரில் டிக்கெட் கட்டணம் ரூ.120 ஆக உயர்த்தப்பட்டது.
நுழைவு கட்டணம் ரூ.99.84, சி.ஜி.எஸ்.டி., ரூ.17.98, உள்ளாட்சி கேளிக்கை வரி ரூ.1,
எஸ்.ஜி.எஸ்.டி., 0.18, மொத்தம் 119. நேற்று கூட்டம் இல்லாததால் நடராஜா தியேட்டரில் காலை, மதிய காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.
சிவம் தியேட்டரில் ரூ.30 கட்டணம் ரூ.40 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இங்கு கணினி
வழி டிக்கெட் இல்லாததால்,
வரிக்காக பிரித்து போடவில்லை. |
|
|
|
|
|