|
கால்வாய் பராமரிப்பில்லாமல் நெற்குப்பை செட்டியூரணி வறண்டது குடிநீராக பயன்பட்டது சுகாதாரக்க Sep 16, 17 |
|
நெற்குப்பை பேரூராட்சி செட்டியூரணி வரத்துக்கால்வாய் பராமரிக்கப்படாததால் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வறண்டுள்ளது.நெற்குப்பை நவனிக் களம் பகுதியில் உள்ளது செட்டியூரணி. இந்த ஊரணியில் நவனிக்கண்மாயிலிருந்துநீர்வரத்து ஏற்பட்டு பெருகுவது வழக்கம். இந்த ஊரணி நீரை இப்பகுதி மக்கள் பல காலமாக குடிநீருக்குபயன்படுத்தி வந்தனர்.
காலப்போக்கில் மழை பொய்த்து கண்மாய் பெருகாததால் நீர்வரத்தின்றி வறண்டுபோனது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த ஊரணி வறண்டு கிடக்கிறது.
தற்போது மழை பெய்து வந்தாலும் நீர் வரத்திற்கான வரத்துக்கால்வாய்் ஏதும் பராமரிக்கப்படாமல்உள்ளதால் ஊரணிக்கு நீர் வரத்து தடைபட்டு விட்டது. இதனால் ஊரணி பெருக வாய்ப்பில்லாமல் உள்ளது. தற்போது மழைக்காலம் துவங்கும் முன்பாக வரத்துக்கால்வாய்களை சீரமைக்க பொதுமக்கள் கோரியுள்ளனர்.
நவனிக்களம் எம்.ஆறுமுகம் கூறியதாவது:
முன்பு இந்த ஊரணியில் நீர் பெருகி குடிக்க உதவியது.
தற்போது தண்ணீர் இல்லாதது மட்டுமல்ல சுகாதாரக் கேடாகவும் உள்ளது. பேரூராட்சி தரப்பில்போதிய நிதி ஒதுக்கி இந்த ஊரணியை மேம்படுத்த வேண்டும். சுற்றுச்சுவர், படித்துறை அமைக்க
வேண்டும். நீர்வரத்துக்கால்வாய் மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
தொடர்ந்து இந்த ஊரணி பராமரிக்கப்படாமல் விட்டால், கரைந்து காணாமல் போகும் ஊரணிகள் பட்டியலில் செட்டியூரணியும் சேர்ந்து விடும் என்ற அச்சம் மக்களிடையே உள்ளது. இதனால் விரைவான நடவடிக்கை மூலம்இந்த ஊரணியைமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
source : Dinamalar |
|
|
|
|
|