|
ரயிலில் பயணிகள் தூங்கும் நேரம் குறைப்பு Sep 17, 17 |
|
முன்பதிவு செய்யப்பட்ட ரயில்களில் செல்லும் பயணிகள் தூங்கும் நேரம் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மாற்றியமைக்கப்பட்டது. இதுவரை, இரவு 9 மணியிலிருந்து காலை 6 மணி வரை தூங்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாக ரயில்வே அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், படுக்கை வசதி குறித்து பயணிகளின் கருத்து கேட்கப்பட்டது. இது தொடர்பாக விதிகள் ஏற்கனவே உள்ளது. தற்போது, அதனை தெளிவுபடுத்தவே புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. படுக்கை வசதி கொண்ட இருக்கையை முன்பதிவு செய்தவர்கள் ரயிலில் ஏறியவுடன் தூங்கி விடுகின்றனர். இது சிலருக்கு பிரச்னையை ஏற்படுத்துகிறது. நீண்ட தூரம் செல்லும் படுக்கை வசதி கொண்ட ரயிலில் ஏறிய பயணி ஒருவர் உடனடியாக படுத்து கொண்டால், மற்ற பெர்த்களுக்கு செல்பவர்களுக்கு சிக்கல் ஏற்படுகிறது. மேலும், அப்பர் பெர்த்தை முன்பதிவு செய்தவர்கள், கீழ் பெர்த்தில் எந்த இருக்கையையும் இரவு10 மணி முதல் காலை 6 மணி வரை உரிமை கோர முடியாது என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் பயணிகளுக்கு இடையே மோதல் ஏற்படுவது தவிர்க்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். |
|
|
|
|
|