Nagaratharonline.com
 
நவராத்திரி விழா: வைஷ்னவ தேவி ஆலயத்தில் ஒரு லட்சம் பக்தர்கள் குவிந்தனர்  Sep 24, 17
 
 
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஜம்மு மாவட்டத்தின் கத்ரா என்ற ஊரின் அருகாமையில் அமைந்துள்ள வைஷ்ணவ தேவி குகைக்கோவில் மிகவும் புனிதமான இந்து சமயக்கோவில்களில் ஒன்றாகும். இந்த கோவில் சக்தி வழிபாட்டிற்கு மிகவும் பெயர் பெற்ற புனிதத்தலமாக விளங்கி வருகின்றது.

வடஇந்தியாவில் மிகவும் போற்றப்படும் வழிபாட்டுத்தலங்களில் இதுவும் ஒன்று. கடல்மட்டத்தில் இருந்து சுமார் 5200 அடிகள் உயரத்தில் இக்கோவில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் சுமார் 8 லட்சம் பக்தர்கள் வைஷ்ணவ தேவி கோவிலுக்கு அன்னையின் அருள் வேண்டி வருகின்றனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் குளிர்கால தலைநகரான ஜம்முவில் இருந்து சுமார் 42 கிலோமீட்டர் தூரத்தில், ரேசாய் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த ஆலயத்துக்கு கத்ரா மலையடிவார முகாமில் இருந்து சுமார் 12 கிலோ மீட்டர் தூரத்துக்கு செங்குத்தான மலையின் வழியாக ஏறிச் செல்ல வேண்டும்,

கடந்த மூன்று நாட்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் இங்கு வந்து தரிசனம் செய்ததாக ஆலய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.