|
NEWS REPORT: லெக்கிங்ஸ் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை Sep 30, 17 |
|
லெக்கிங்ஸ் வாங்கும் போதும் அணியும் போதும் கவனிக்க வேண்டிய முக்கிய குறிப்புகள் பின்வருமாறு:-
லெக்கிங்ஸின் துணி மிகவும் முக்கியம். துணியின் வகை லைக்ரா, பிவிசி, ரேயான், ஸ்பேன்டெக்ஸ் ப்ளெண்ட் வகையாக இருக்க வேண்டும்.
இருக்கமான குட்டையான குர்தியின் கீழ் லெக்கிங்ஸ் அணியக்கூடாது.
ப்ளெயின் லெக்கிங்ஸ் மேல் பூப்போட்ட கும்தி அணிவதே நன்றாக இருக்கும். இல்லையென்றால் ப்ளெயின் குர்திக்கு பிரிட்டட் லெக்கிங்ஸ் அணியலாம்.
அளவு சிறிதான லெக்கிங்ஸ் அணிய வேண்டாம். போடும்போது நீண்டு கொடுத்தாலும் உடலின் பாகங்களை குறிப்பாக தொடைப் பகுதியை அசிங்கமாக வெளிப்படுத்தும்.
நீளமான குர்தி அல்லது அனார்கலியுடன் மட்டுமே பருமனான பெண்கள் லெக்கிங்ஸ் அணிவது நல்லது. காலர் மற்றும் முழுக்கை குர்திக்கு லெக்கிங்ஸ் அணிவதை தவிர்த்து சுரிதார் அணியலாம். பட்டன் மற்றும் ஜிப் பிரச்சனை இல்லாத ஜெக்கிங்ஸ் ஜீன்ஸ் பான்ட்டிற்கு சிறந்த மாற்றாக இருக்கு
லெக்கின்ஸ் இல் பல வகைகள் இருக்கின்றன.
1. கணுக்கால் வரை மட்டுமே இருக்கக்கூடியவை தான் பெரும்பாலான பெண்கள் அணியக்கூடியதாக இருக்கிறது.
2. கெண்டைக்கால் வரையில் அணியக்கூடிய லெக்கிங்ஸ் இளம் பெண்கள் மற்றும் சிறுமியர் அணிய ஏற்றதாக இருக்கும்.
3. கால் குதிகால் வரை நீண்டு பாதத்தின் அடிவரையில் இருப்பது ஸ்டிர்ரப் என்று அழைக்கப்படுகிறது.
4. பாதம் முழுவதுமே நீண்டிருக்கும் லெக்கிங்ஸ் ஃபுட்டட் என்று வழங்கப்படுகிறது.
5. செமி பாட்டியாலா மாடலில் தளர்வான வடிவமைப்பிலும், கணுக்காலிலிருந்து மடிப்புகள் கொண்ட கேதரிங் மாடலிலும் தற்போது லெக்கிங்ஸ் கிடைக்கிறது |
|
|
|
|
|