Nagaratharonline.com
 
NEWS REPORT: வங்கி கணக்கில் ஆதார் கார்டு இணைக்கப்பட்டுள்ளதா? சரிபார்ப்பது எப்படி?  Oct 1, 17
 
அரசு அறிவிப்பின் படி 2017 ஜூன் 1 ஆக இருந்த ஆதார் வங்கி கணக்கு இணைப்பு 2017 டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

உங்கள் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வங்கியில் நீங்கள் கோரிக்கை வைத்து ஆவணங்களைச் சமர்ப்பித்து இருந்தாலும் சில நேரங்களில் இணைப்பு ரத்து செய்யப்பட்டு இருக்கவும் வாய்ப்புகள் உண்டு. எனவே ஆதார் இணையதளத்தில் வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதா என்று எப்படிச் சரிபார்ப்பது என்று இங்குப் பார்ப்போம்.

1) www.uidai.gov.in என்ற ஆதார் இணையதளத்திற்குச் செல்லவும். ஆதார் மற்றும் வங்கி கணக்கு இணைப்பைச் சரிபார்த்தல் என்ற தெரிவை தேர்வு செய்யவும்.

2 ) உங்கள் ஆதார் எண் மற்றும் பாதுகாப்புக் குறியீட்டை உள்ளிட்ட பிறகு சமர்ப்பிக்கவும் என்ற பொத்தானை அழுத்தவும்

3 )ஆதார் கர்டுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஒரு முறை கடவுச் சொல் அனுப்பப்படும். அதனை உள்ளிட்ட பிறகு நிலை உங்களுக்குக் காண்பிக்கப்படும்.

4 )வெற்றிகரமாக மேலே கூறிய படிகளை எல்லாம் செய்த பிறகு ஆதார் கார்டு இணைக்கப்பட்டு இருந்தால் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டதற்கான விவரங்களைக் காண்பிக்கும்.

5 ) எந்த வங்கி கணக்கும் இணைக்கப்படவில்லை என்று தகவல் காண்பிக்கப்பட்டால் உங்கள் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை வங்கி கிளைகளில் சமர்ப்பித்து இணைப்பைப் பூர்த்திச் செய்ய வேண்டும். குறிப்பு இணைப்பின் போது பெயர், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்கள் சரியாகப் பொருந்த வேண்டும். இல்லை என்றால் இணைப்பினை செய்ய முடியாது. வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதா என்று மொபைல் எண் மூலம் எப்படிச் சரிபார்ப்பது? *99*99*1# என்று மொபைலில் டையல் செய்து 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும். பின்னர் நீங்கள் உள்ளிட்ட ஆதார் எண்ணைச் சரிபார்த்து உறுதி செய்த பிறகு அதனைச் சமர்ப்பித்தால் இணைப்பின் நிலையினைப் பார்க்க முடியும். ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கி கணக்கை வைத்து இருந்தால் கடைசியாக எந்த வங்கி கணக்கில் ஆதார் எண்ணை இணைத்துள்ளார்களோ அதனைத் தான் காண்பிக்கும். எனவே பிற கணக்குகளுக்கு அருகில் உள்ள வங்கி கிளைகளில் சென்று சரி பார்க்கலாம்.