Nagaratharonline.com
 
பக்தர்களை சோதிக்கும் போக்குவரத்து கழகம்  Oct 10, 17
 
வெட்டுடையார் காளியம்மன் கோயிலுக்கு பஸ் வசதி இல்லாததால் பக்தர்கள் சிரமப்படுகின்றனர்..இக்கோயில் கொல்லங்குடி விலக்கில் இருந்து 2 கி.மீ., துாரத்தில் உள்ளது. இதனால் கொல்லங்குடி விலக்கில் இறங்கி நடந்து செல்ல வேண்டியுள்ளது. ஆட்டோக்களில் செல்வதற்கு 50 முதல் 100 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் பக்தர்கள்
சிரமப்படுகின்றனர்.

அழகாபுரி உ.சிங்காரம் கூறியதாவது: காளியம்மன் கோயிலுக்கு திருவிழா காலங்களில் மட்டுமே சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. மற்ற நாட்களில் கொல்லங்குடியில் இறங்கி செல்ல வேண்டியுள்ளது.

மதுரையில் இருந்து தொண்டிக்கு தினமும் ஏராளமான பஸ்கள் செல்கின்றன. அதில் சில பஸ்களை கோயில் வழியாக இயக்க வேண்டும் அல்லது சிவகங்கையில் இருந்து கொல்லங்குடி, அரியாக்குறிச்சி வெட்டுடையார் காளியம்மன் கோயில், சாத்தனி, ராணியூர், உடைவயல் வழியாக காளையார்கோவிலுக்கு பஸ்களை இயக்கலாம்.இதுகுறித்து பலமுறை மனு கொடுத்தும் அரசு போக்குவரத்து கழகத்தினர் நடவடிக்கை இல்லை. பக்தர்களின் சிரமத்தை போக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.