Nagaratharonline.com
 
NEWS REPORT: சென்னை வாழ் நெற்குப்பை நகரத்தார் சங்க 26 -வது ஆண்டு விழா  Jan 8, 18
 
 
சென்னை வாழ் நெற்குப்பை நகரத்தார் சங்க 26 -வது ஆண்டு விழா 7/1/2018 ஞாயிற்றுகிழமை, மயிலாப்பூர் வித்யா பாரதி கல்யாண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது, மேலும் இந்த ஆண்டு விழா, சங்க உறுப்பினர்கள் அனைவரும் கூடி மகிழ்தல் விழாவாகவும் கொண்டாடப்பட்டது .

Dr.N. கிருஷ்ணன் M.S., D.O., அவர்கள் (Director,Frontline Eye Hospital)தலைமை உரை ஆற்றினார்கள். நாம், நமது கண்களை எப்படி பத்திரமாக பார்த்து கொள்கிறோமோ, அதே போன்று நமது செட்டி நாட்டு பாரம்பரியத்தை பேணி பாதுகாக்க வேண்டும் என்றும் கோவிலூரில் இயங்கி வரும் காணல் கண் மருத்துவ மனையின் சேவைகளையும் குறிப்பிட்டார்கள்.

நமது இனத்தைசேர்ந்த, காவல் துறை துணைக் கண்காணிப்பாளர், திரு.S. முத்துக்குமார் அவர்கள் தமது உரையில் விட்டுக் கொடுத்து
வாழ வேண்டும் என்று குறிப்பிட்டார்கள். அவர்களது சேவையை பாராட்டி, கௌரவிக்கப்பட்டார்கள்.

நகைச்சுவை நாவலர், புலவர் மா. இராமலிங்கம் அவர்கள் "வாழ்க்கை வாழ்வதற்கே" என்ற தலைப்பில் சீரிய கருத்துக்களை நகைச்சுவையாக கூறினார்.

விழா நிகழ்ச்சிகளை, சங்க முன்னாள் தலைவர் ,திரு. இராம்குமார் சிங்காரம் அவர்கள் மிக சிறப்பாக தொகுத்து வழங்கினார்கள்.

குழந்தைகள் மற்றும் ஆச்சிகளுக்கான விளையாட்டுப்போட்டி, மகளிருக்கான சமையல் போட்டி, குழந்தைகளின் தனித்திறமை வெளிப்பாடு நிகழ்ச்சி, வினாடி வினா மற்றும் பல நிகழ்ச்சிகள் நடைபெற்றன . காலை பலகாரம் , மதிய விருந்து , மாலை சிற்றுண்டி ஆகியவை சுவையாக பரிமாறப்பட்டது .


விழா ஏற்பாடுகளை, சங்க தலைவர் ப. பனையப்பன், செயலாளர் லெ. பரணி விஜயன், பொருளாளர்இராம கருப்பையா மற்றும்
நிர்வாகக் குழு உறுப்பினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

நிறைவாக துணைத்தலைவர் தெ அருணாசலம் கணேஷ்வர் நன்றியுரை கூற, ஆண்டு விழா நிறைவுற்றது.