|
மஞ்சுவிரட்டிற்கு தயாராகும் சிராவயல் பொட்டல் Jan 8, 18 |
|
பொங்கலை அடுத்து தை3ம் தேதியன்று 6 தலைமுறைகளுக்கும் மேலாக சிராவயல்மஞ்சுவிரட்டு நடைபெறுகிறது.தொழுவில் 'மஞ்சி' எனப்படும் கோயில் துண்டு கட்டப்பட்டு அவிழ்த்து விடப்படும் காளைகள் பரந்த மைதானத்தில் ஓடுவதும், நின்று விளையாடுவதும், மக்கள் சூழ நடுவில் நின்று பாய்ச்சல் காட்டுவதும்.ரசிகர் கர கோஷத்திற்கிடையே மாடு பிடி வீரர்கள் வியூகம் வகுத்து காளையை அணைத்து துண்டை அவிழ்ப்பதும் பார்க்க கண் கொள்ளா காட்சி ஆகும்.
மஞ்சுவிரட்டு குறித்து சிராவயல் வேலுச்சாமி அம்பலகாரர் கூறியதாவது: சிவகங்கை மாவட்ட பாரம்பரியப்படி ஜன.,16ல்மஞ்சுவிரட்டு நடத்தப்பட உள்ளது. சுமார் 1200 காளைகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காலை 11:00 மணிக்குபெரியநாயகி அம்மன் கோயில், தேனாட்சி அம்மன் கோயில் வழிபாட்டிற்கு பின் முன்னோர் வழிபாடு நடந்து, நாட்டார் அழைப்பு பொட்டலிலுள்ள தொழுவிற்குசென்று பகல் 12:00 மணிக்கு மேல் காளைகள் தொழுவிலிருந்து அவிழ்க்கப்படும். காளைகளுக்கு துண்டு அணிவிக்கப்பட்டு அவிழ்க்கப்படும். பரிசுகள் ஏதும் வழங்கப்படாது,என்றார்.
இந்த பொட்டலில் சில கான்கிரீட் மேடைகள் மட்டுமே உள்ளன. இந்நிலையில் தற்போது எம்.எல்.ஏ.,பெரியகருப்பன்தொகுதி நிதி மூலம் ரூ.12 லட்சத்திற்கான பார்வையாளர் மேடை அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் இரு கட்டமாக ரூ 50 லட்சம் வரை ஒதுக்கப்பட உள்ளது. இந்த காலரி விளையாட்டு மைதானத்திற்கான பார்வையாளர்கள் அமர்ந்து பார்ப்பது போன்று அமைக்கப்படாமல் ஏதோ கட்டடம் கட்டுவது போல மேடையாக கட்டப்பட்டுள்ளது. கூடுதலான பார்வையாளர்கள்அமரும் வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது. இனி கட்டப்படும் காலரிகள் விளையாட்டு மைதான ஸ்டேடியம் பாணியில் கட்ட திட்டமிட பொதுப்பணித்துறையினர் முன் வரவேண்டும். இதனால் மஞ்சுவிரட்டு மட்டுமின்றி பிற விளையாட்டுகள் இந்த மைதானத்தில் விளையாடவும் கிராமத்தினருக்கு பயன்படும். |
|
|
|
|
|