|
நாட்டரசன்கோட்டையில் ஸ்ரீ பெருமாள் ஆற்றில் இறங்கினார். Apr 29, 10 |
|
சிவகங்கை,ஏப்.28: நாட்டரசன்கோட்டை ஆற்றில் பிரசன்னவெங்கடாசலபதி 57 ஆண்டுகளுக்கு பிறகு இறங்கினார்,
சிவகங்கை சமஸ்தானத்துக்குள்பட்ட இக்கோயில் சித்திரைத் திருவிழா முன்பு வெகுவிமரிசையாக நடத்தப்பட்டு வந்த நிலையில் பல்வேறு காரணங்களால் விழா நடைபெறாமல் போனது.
இந்நிலையிóல் மீண்டும் இந்த ஆண்டு சித்திரை விழா நடத்த கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்தது. இதனால் நாட்டரசன்கோட்டை பகுதியில் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
செவ்வாய்க்கிழமை காலை காப்புகட்டுதலுடன் திருவிழா துவங்கியது. மாலையில் பெருமாள் பல்லக்கில் எழுந்தருளி வலம் வந்து பக்தர்களுக்குக் காட்சி தந்தார். புதன்கிழமை காலை பெருமாள் ஆற்றில் இறங்கும் வைபவம் காலை 9 மணிக்கு துவங்கியது.
குதிரை வாகனத்தில் பெருமாள் புறப்பட்டு கோயில்களிலும், மண்டகப்படிகளிலும் எழுந்தருளி வந்து சிவகங்கை சாலையில் உள்ள தண்ணீர் பந்தலில் ஆற்றில் இறங்கினார்.
ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தரிசித்தனர்.
விழா ஏற்பாடுகளை ஆலய கண்காணிப்பாளர் சரவணகணேசன், கெüரவ கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன், தேவஸ்தான மேலாளர் இளங்கோ ஆகியோர் செய்திருந்தனர். வியாழக்கிழமையும் பெருமாள் பல்லக்கில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தருகிறார். இரவு 8 மணிக்கு கோயிலை வந்தடைகிறார்.
Source: Dinamani |
|
|
|
|
|