Nagaratharonline.com
 
எழும்பூர், சென்டிரல் ரெயில் நிலையங்களில் 10 ரூபாய் கட்டணத்தில் விரைவில் பேட்டரி கார் வசதி  Jan 31, 18
 
சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் பேட்டரி கார் வசதி உள்ளது.

இதில் மாற்று திறனாளிகள், வயதானவர்களை இலவசமாக ஏற்றி கொண்டு அவர்கள் செல்லும் ரெயிலின் பெட்டி வரை கொண்டு சென்று விடப்படுகிறார்கள். இது வயதான பயணிகளுக்கு பெரும் வசதியாக இருக்கிறது..

இனி சாதாரண பயணிகளையும் பேட்டரி காரில் அழைத்து செல்ல முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. இதற்காக ரூ.10 கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.

இதில் பெரிய லக்கேஜ் கொண்டு செல்ல அனுமதி கிடையாது. கைகளில் வைத்து இருக்கும் சிறிய பைகளை வைத்து கொள்ளலாம்.

மாற்று திறனாளிகள், வயதானவர்களுக்கான இலவச பேட்டரி கார் வசதி தொடரும். அதில் மாற்றம் இல்லை.

ரூ.10 கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதையடுத்து கூடுதலாக பேட்டரி கார்கள் வரவழைக்கப்படுகிறது.

பேட்டரி கார் வசதி வயதானவர்களுக்கு மட்டு மின்றி மற்ற பயணிகளுக்கும் கிடைப்பதால் பிளாட் பாரத்தில் நீண்ட தூரம் சென்று ரெயில் பெட்டியில் ஏறும் சிரமம் இனி இருக்காது. இந்த திட்டம் விரைவில் அமலுக்கு வருகிறது.