Nagaratharonline.com
 
காரைக்குடியில் புத்தக திருவிழா தொடக்கம்  Feb 11, 18
 
காரைக்குடி புத்தக திருவிழா குழு நடத்தும் மாநில அளவிலான புத்தக திருவிழா கம்பன் மணிமண்படத்தில் தொடங்கியது. அமைப்பு செயலர் முத்து பழனியப்பன் வரவேற்றார். தலைவர் அய்க்கண் தலைமை வகித்தார். பொருளாளர் வி.வெங்கடாசலம் முன்னிலை வகித்தார்.குன்றக்குடி பொன்னம் பல அடிகள் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார், மதுரை மண்டல இந்தியன் வங்கி துணை பொது மேலாளர் பாரதி, கம்பன் அறநிலை தலைவர் சத்தி அ.திருநாவுக்கரசு, தொழிலதிபர் பழ.படிக்காசு, சென்னை பபாசி தலைவர் வயிரவன், செயலாளர் அரு.வெங்கடாசலம், கவிஞர் வள்ளியப்பன், புத்தக திருவிழா துணை தலைவர் சுவாமி பேசினர். புத்தக திருவிழா குழு துணை தலைவர் ஸ்ரீவித்யா ராஜகோபாலன் நன்றி கூறினார். கவிஞர் ரவிச்சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.புத்தக திருவிழாவை முன்னிட்டு ரூ.2 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் 10 அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டது.

வருகிற 18-ம் தேதி வரை மாலை 4:00 மணி முதல் இரவு 9:00 மணி வரையும், சனி, ஞாயிறு கிழமைகளில் காலை 11:00 மணி முதல் இரவு 9:00 மணி வரையும் புத்தக கண்காட்சி நடக்கிறது.