Nagaratharonline.com
 
சென்னை-மதுரை இடையே 12 ஆண்டுகளாக நடந்த பணி நிறைவு: இரட்டை பாதையில் ரயில்கள் ஓடத் தொடங்கின  Apr 1, 18
 
தமிழகத்தில் கடந்த 12 ஆண்டுகளாக நடந்துவந்த சென்னை - மதுரை இரட்டை ரயில் பாதை பணிகள் அனைத்தும் முடிவடைந்ததை அடுத்து, புதிதாக அமைக்கப்பட்ட 2-வது தடத்தில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு நடத்தி, ரயில்களை இயக்க ஒப்புதலும் அளித்தார். இதைத் தொடர்ந்து, இந்த புதிய பாதையில் நேற்றுமுதல் ரயில்கள் ஓடத் தொடங்கின. இந்த புதிய இரட்டை பாதை மூலம் சென்னையில் இருந்து மதுரை வரை புதிதாக 10 விரைவு ரயில்கள் இயக்க முடியும் என்று ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர். இதன்மூலம், ஆயிரக்கணக்கானோர் பயன்பெறுவார்கள்.