Nagaratharonline.com
 
NEWS REPORT: ECR 'சைக்கிள் ஷேரிங்' : மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு  Apr 12, 18
 
ECR சாலையில், சைக்கிள் ஷேரிங் திட்டம் கொண்டு வருவது தொடர்பாக, தனியார் நிறுவன உதவியுடன், சென்னை மாநகராட்சி ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

சென்னை மாநகரில், பொதுமக்களிடம் சைக்கிள் ஓட்டுவது குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில், வாடகை சைக்கிள் ஷேரிங் திட்டம் கொண்டு வரப்பட உள்ளது.

இதற்காக, சென்னை நகரின் சில முக்கிய சாலைகளை இணைக்கும் வகையில், 378 இடங்களில், சைக்கிள் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இவற்றில், பொதுமக்கள் வாடகைக்கு எடுத்து பயன்படுத்தும் வகையில், 5,000 சைக்கிள்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளன.

இந்த திட்டத்தில், சைக்கிளை எடுக்க விரும்பும் பயணியர், ஆதார் எண்ணுடன் தங்கள் விபரங்களை, 'ஆன்லைனில்' பதிவு செய்ய வேண்டும். 'க்யூ.ஆர்., கோடு' வசதி வழியாக சைக்கள் ஷேரிங் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

மேலும், சைக்கிள் திருடப்படுவதை தடுக்க, அனைத்து சைக்களிலும், ஜி.பி.ஆர்.எஸ்., கருவி பொருத்தப்பட உள்ளது.

முதற்கட்டமாக, நேப்பியார், சிவனாந்த சாலை, கிரின்வேஸ் சாலை உள்ளிட்ட, 17 கி.மீ'சைக்கிள் ஷேரிங்' : மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு., துாரத்துக்கு, சைக்கிள் ஷேரிங் திட்டம், இந்த மாத இறுதியில் துவங்கப்பட உள்ளது.

இந்நிலையில், சைக்கிள் ஷேரிங் திட்டத்தை, ECR சாலையிலும் செயல்படுத்த, மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.