|
படுமோசமான தேவகோட்டை பூங்கா ரோடு May 2, 18 |
|
தேவகோட்டை ஒன்றாவது வார்டில் அமைந்துள்ளது அழகாபுரி நகர். இந்த பகுதியில் மக்கள் அதிகமாக பயன்படுத்தும் அழாகாபுரி பூங்கா, மத்திய கூட்டுறவு வங்கி, பள்ளிகள், தேவாலயங்கள் உள்ளன. பூங்கா எதிரே உள்ள அழகாபுரி நகர் ரோடு கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளது.
பூங்காவிற்கு வரும் டூவீலர், கார்களின் டயர்களை கற்கள் பதம் பார்க்கிறது. இந்த ரோடு அமைத்து நான்கு வருடங்களுக்கு மேலாகிவிட்டது. ரோட்டை சரிசெய்ய பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தும் பலனில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். |
|
|
|
|
|