|
இருசக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு Jul 5, 18 |
|
நீதிபதிகள், சாலை விதிகளை மீறுபவர்கள் அதிகரித்து வருவதாகவும், சாலை விதிகளை மதிக்காத போக்கு அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தனர். சீட் பெல்ட் அணிவது, ஹெல்மெட் அணிவது அவசியம் என்பதை உறுதிப்படுத்தவேண்டும், இருசக்கர வாகனங்களில் கார்களில் நிறுவனங்கள் அளித்துள்ள முகப்பு விளக்குகளை மாற்றி, அதிக ஒளி உமிழும் எல்.ஈ.டி பல்புகளைப் பொருத்துவதும், முகப்பு விளக்கில் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டவேண்டும் என்ற விதியையும் மீறுவதையும் கண்காணித்து சாலை விதிகளை முறையாக அமல்படுத்தப்படவேண்டும்.
விதியை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதையும், ஹெல்மெட் அணிவது என்பது இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் இருவருமே அணியவேண்டும், நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணியும் சட்டத்தை முறையாக அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு இந்த உத்தரவுகளை அமல்படுத்துவது தொடர்பான விரிவான அறிக்கையை தமிழக அரசு வரும் 27-ம் தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர். |
|
|
|
|
|