Nagaratharonline.com
 
NEWS REPORT: சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவில் முதலில் வருபவருக்கு முன்னுரிமை அளிக்கும் வகை  Sep 13, 18
 
பத்திரப்பதிவில் முதலில் வரு பவருக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் டோக்கன் எண் வழங்கி, பதிவு செய்யும் திட்டம் 50 சார்பதிவாளர் அலுவலகங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் விரைவில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் அமல்படுத்தப்பட உள்ளது.

தமிழக பதிவுத்துறையில் ‘ஸ்டார் 2.0’ என்ற புதிய மென் பொருள் மூலம் ஆன்லைனில் பதிவுகள் நடக்கின்றன. கணினி யிலேயே ஆவணத்தை தயாரித்து, சார்பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்யும் திட்டம் தற்போது மக்கள் மத்தியில் பெரும் வர வேற்பைப் பெற்றுள்ளது. தொடர்ந்து இதில் பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப் படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பதிவுக்காக வருவோரை காத்திருக்க வைக்கா மல், முதலில் வருபவர்கள் முதலில் பதிவு முடித்து வெளியேறும் (First In First Out) என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் தற்போது தமிழகத்தில் 50 பதிவு மாவட்டங்களில் தலா ஒரு சார்பதிவாளர் அலுவலகங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

விரைவில் இத்திட்டம் தமிழ கம் முழுவதும் உள்ள 575 சார்பதிவாளர் அலுவலகங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.