|
நகரத்தார்களின் 76 ஊர்களுக்கு, காசி நரகேஸ்வரர் கோயில் தங்க கோபுர கலசங்கள் தரிசனம் Oct 17, 18 |
|
காசி நரகேஸ்வரர் கோயிலில் நவ.9ம் தேதி கும்பாபிேஷகம் நடக்கிறது.இந்துக்களின் முக்கிய புனித தலமான காசியில் நகரத்தார்களுக்கு பாத்தியப்பட்ட காசி நாட்டுக்கோட்டை நகர சத்திரம் உள்ளது. இங்குள்ள நரகேஸ்வரர் கோயிலில் குடமுழுக்கிற்கான திருப்பணி நடைபெற்று வருகிறது.
கோயிலில் வைப்பதற்கு தேவையான கலசங்கள் தமிழகத்தில் செய்யப்பட்டு மக்கள் தரிசனத்திற்காக நகரத்தார்களின் 76 ஊர்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. கடந்த ஆக.10ந் தேதி பிள்ளையார் பட்டியிலிருந்து தங்க கலசங்கள் புறப்பட்டு நகரத்தார் வசிக்கும் ஊர்களுக்கு சென்று நேற்று காலை தேவகோட்டை சிவன்கோயில் வந்தடைந்தது.நகர சிவன்கோயிலில் டிரஸ்டிகள் அன்னபூரணி சிலை மற்றும் கோபுர கலசங்களை கொண்டு வந்த காசி நாட்டுக்கோட்டை நகர சத்திர தலைவர் லேனா காசிநாதன் மற்றும் பொறுப்பாளர்களை வரவேற்றனர்.பின்னர் கலசங்களும் அன்னபூரணி சிலையும் பக்தர்கள் தரிசனத்திற்கு வைக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நிறைவு நாளான இன்று இக்கலசங்கள் ஆறாவயல், கல்லுப்பட்டி, அமராவதி புதுார், கோவிலுார், காரைக்குடி ஆகிய இடங்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு வைக்கப்பட்டு பின்னர் காசிக்கு எடுத்து செல்லப்படுகிறது. காசி நரகேஸ்வரர் கோயிலில் வரும் நவ. 9 ம் தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளது. |
|
|
|
|
|