Nagaratharonline.com
 
அரளிப்பாறை மஞ்சுவிரட்டில் ஆட்டம் போட்ட காளைகள்  Feb 20, 19
 
அரளிப்பாறையில் நடந்த மஞ்சுவிரட்டில் ஆட்டம் போட்ட காளைகளை இளைஞர்கள் அடக்கினர்.இங்குள்ள பாலதண்டாயுதபாணி கோயில் மாசி மகத்திருவிழாவையொட்டி அரளிப்பாறை அடிவாரத்தில் ஐந்துநிலை நாட்டார்கள் சார்பில் மஞ்சுவிரட்டு நடந்தது. தொழுமுன் வாடி வாசல் அமைக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் 400க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. பாலதண்டாயுதபாணிக்கு சிறப்பு வழிபாடு நடத்தி மஞ்சுவிரட்டை தொடங்கி, பகல் 1:15 மணிக்கு தொழு மாடுகள் அவிழ்க்கப்பட்டது. முதலில் சிங்கம்புணரி சேவுகமூர்த்தி மாடுகள் திறந்துவிடப்பட்டது. இதை தொடர்ந்து மற்ற மாடுகள் ஒவ்வொன்றாக அவிழ்க்கப்பட்டன.