Nagaratharonline.com
 
காரைக்குடியில் கம்பன் திருவிழா  Mar 23, 19
 
காரைக்குடி கம்பன் கழகத்தாரால் கம்பன் திருவிழா காரைக்குடி கிருஷ்ணா கல்யாண மண்டபத்தில் நடந்தது. கடைசி நாளன்று நாட்டரசன்கோட்டை கம்பன் அருட் சமாதி கோயிலிலும் விழா நடைபெற்றது.பழ. பழனியப்பன் வரவேற்றார். வழக்கறிஞர் ராமலிங்கம் தொடங்கி வைத்தார்.

விழாவில் கம்பன் கழகம் நடத்திய இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை பள்ளத்துார் பழ. பழனியப்பன் வழங்கினார். பழ. பழனியப்பன் எழுதிய 'அலகிலா விளையாட்டு ஓர் அறிவியல் பார்வை,' என்ற நுால் வெளியிடப்பட்டது. 2ம் நாள் விழாவிற்கு கோவிலுார் மெய்யப்ப ஞான சுவாமி தலைமை வகித்தார். பேராசிரியர் அப்துல் காதர் சொற்பொழிவாற்றினார் .பேராசிரியர் சொ.சேதுபதி எழுதிய 'கம்பனில் ஆழங் கண்ட வேழம் - கம்பன்' நுாலை சென்னை கம்பன் கழக துணைச் செயலாளர் வழக்கறிஞர் பாலசீனிவாசன் வெளியிட்டார் . *

காரைக்குடி கம்பன் மணி மண்டபத்தில் கம்பன் திருநாள் நடைபெற்றது. விழாவிற்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மகாதேவன் தலைமை வகித்தார். கம்பன் அறநிலையத் தலைவர் திருநாவுக்கரசு வரவேற்றார்.முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.ஆர் . லெட்சுமணன் தொடக்க உரையாற்றினார் . "வள்ளுவன் பாதையில் கம்பன் " மற்றும் "கம்பன் பாதையில் பாரதி " என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது . கவிஞர் தி.கோவிந்தராசன்,சொக்கலிங்கம் பங்கேற்றனர். தமிழருவி மணியன் " கம்பனும் வால்மீகியும் " என்ற தலைப்பில் பேசினார். பாரதி திருமகன்,கலைமகன் குழுவினரின் "கம்பன் சொல்லும் ராமன் வில்லும்" என்ற தலைப்பில் வில்லிசை நடைபெற்றது . கம்பனில் மிகுதியும் சிறப்பிக்க பெறுபவர் ஆடவரா? மகளிரா ? என்ற தலைப்பில் பட்டி மன்றம் நடைபெற்றது . நடுவராக திண்டுக்கல் ஐ. லியோனி பங்கேற்றார்.