|
கீரணிப்பட்டி பூச்சொரிதல் விழா Apr 3, 19 |
|
கீரணிப்பட்டியில் முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா நடந்தது.காலை 10.00 மணி முதல் பக்தர்கள் பூத்தட்டு, பால்குடம் எடுத்து அம்மனுக்கு நேர்த்தி செலுத்தினர். மாலை 3.45 மணிக்கு பூக்களால் அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து ஏப்., 7ல் மாலை உற்ஸவ அம்பாள் இளையாத்தங்குடியிலிருந்து கீரணிப் பட்டிக்கு வெள்ளி சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய பின்னர் காப்புக் கட்டி மகோத்ஸவம் துவங்கும். தினசரி அம்பாள் வாகனங்களில் திருவீதி உலா நடைபெறும். ஏப்.13ல் புஸ்ப பல்லக்கும், ஏப்..15ல் தேரோட்டமும் நடைபெறும். ஏப்.,16ல் அம்மன் இளையாத்தங்குடி திரும்புதலுடன் மகோத்ஸவம் நிறைவடையும்.ஏற்பாட்டினை இளையாத்தங்குடி தேவஸ்தானத்தினர் செய்கின்றனர். |
|
|
|
|
|