|
தேசிய நெடுஞ்சாலைகளில் வேகத்தடை அமைப்பு May 9, 10 |
|
திருப்பத்தூர்,மே 7: திருப்பத்தூரில், தேவகோட்டை - மதுரை நெடுஞ்சாலைகளில் விபத்துகளைத் தவிர்க்க வேகத்தடை மற்றும் ஓளிரும் பிரதிபலிப்பான் பொருத்தும் பணி நடைபெற்றது.
சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி காவல் துறை சார்பாக விபத்தைத் தடுக்க மாவட்டம் முழுவதும் ரூ,9 லட்சம் செலவில் விபத்து தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அதில் திருப்பத்தூர் தாலுகாவிற்கென மதுரை சாலை, அரசினர் மருத்துவமனை அருகிலும், புதுப்பட்டியில் பள்ளி அருகிலும், திருப்பத்தூர் துணை கண்காணிப்பாளர் முருகேசன் மேற்பார்வையில் வேகத்தடை பொறுத்தபட்டது.
16 எச்சரிக்கை போர்டுகளும், காவலர்களுக்கு 14 ஓளிரும் சட்டைகளும், மதுஅருந்தி ஓட்டுபவர்களைக் கண்காணிக்க 4 ஆல்ஹஹால் மைக்குகளும், சாலையின் நடுவே ஓளிரும் பிரதிபலிப்பான் முதலியன வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ஆயுதப்படை சார்பு ஆய்வாளர் ஜெயசீலன், திருப்பத்தூர் போக்குவரத்து சார்புஆய்வாளர் குருசாமி, போக்குவரத்து தலைமைக் காவலர் சண்முகம் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து டி.எஸ்.பி. முருகேசன் கூறுகையில் மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் சாலை விபத்துகளைத் தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
விபத்து உண்டாகும் வளைவுகளில் பிரதிபலிப்பான் பொருத்தும் பணியும், பள்ளி ,மருத்துவமனை அருகிலும் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
Source:Dinamani
May 8 |
|
|
|
|
|