|
அக்னி நட்சத்திரம் : மே-4 முதல் சூரியன் அக்னியை கடுமையாக கக்கும் Apr 25, 19 |
|
கத்தரி வெயில் என்று சொல்லப்படும் அக்னி நட்சத்திரம் மே-4 தேதி துவங்குகிறது.
பருவமழை பொய்த்ததால் இந்தியா முழுவதும் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் 141 ஆண்டுகள் இல்லாத கடுமையான வறட்சி நிலவி வருகிறது.வறட்சி மற்றும் வெப்பத்தின் தாக்கம் காரணமாக மக்கள் அல்லாடி வருகின்றனர். தமிழகத்தில் மார்ச் மாதமே பல இடங்களில் 100 டிகிரி வெயில் அடித்தது.
இந்நிலையில், கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் 4ஆம் தேதி தொடங்கி மே 28 வரை நீடிக்கிறது.
இந்த நாட்களில் கடுமையான வெயில் அடிக்கும் என்று கருத்தப்படுகிறது. மேலும் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் சில இடங்களில் வெப்ப சலனத்தின் காரணமாக மழைப்பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது |
|
|
|
|
|