|
H 1 B விசா பணியாளர்கள் நிறுவனம் மாற டிரம்ப் தடை Apr 29, 19 |
|
அமெரிக்கா பணிபுரிய வெளிநாட்டினருக்கு எச்-1 பி விசா வழங்கப்படுகிறது. இந்த விசாவில் குறிப்பிட்டகாலம் தங்கி பணியாற்றினால் நிறுவனத்தின் பரிந்துரையின் பேரில் கிரீன் கார்டும், பின்னர் நிரந்தர குடியுரிமையும் பெறலாம். டிரம்ப் அதிபரான பின் வெளிநாட்டினருக்கு சோதனைக்காலம் தொடங்கியது. எச்-1 பி விசாவிற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்த விசாவில் பணியாற்றுவோருக்கும் பிரச்னைகள் தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
இதுவரை எச்-1 பி விசா மூலம் அமெரிக்காவில் இருப்பவர்கள் வேறு நிறுவனங்களுக்கு மாறிக்கொள்ளலாம். ஆனால், இப்போது விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளன. முன்பு அனைத்து வேலைகளுக்கும் எச்-1 பி விசா வழங்கப்பட்டது. இப்போது உயர் தகுதி வேலைகள் என பட்டியல் உருவாக்கப்பட்டு அதில் உள்ள பணிகளுக்கு மட்டுமே எச்-1 பி விசா வழங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதுவரை, விசாவில் வரும் ஒருவர் பணியாற்றி வரும் ஒரு நிறுவனத்தில் இருந்து அதே மாதிரியான வேலையில் மற்றொரு நிறுவனத்திற்கு மாறிக்கொள்ள முடியும். தற்போது அதுவும் மாற்றப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இரு நிறுவனங்களிலும் அந்த வேலை உயர் தகுதி பட்டியலில் இருந்தால் மட்டுமே மாறிக்கொள்ள முடியும்.
ஆனால், பெரும்பாலான வேலைகளை உயர் தகுதி பட்டியலில் சேர்க்கவில்லை. எனவே, நிறுவனம் மாற முடியாத நிலை எச்-1 பி விசாதாரர்களுக்கு ஏற்பட்டு உள்ளது.மேலும் மனைவி- குழந்தைகளை அமெரிக்காவுக்கு அழைத்து வருவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எச்-1 பி விசா பெறுவதில் இந்தியாவே முன்னிலையில் உள்ளது. டிரம்பின் அடுத்தடுத்த உத்தரவுகளால் அமெரிக்கா செல்ல விரும்பும் இந்தியர்களுக்கும், அங்கு இருந்தபடியே வேறு வேலைக்கு செல்ல முயலும் இந்தியர்களுக்குமே அதிக சிக்கல் ஏற்பட்டுள்ளது |
|
|
|
|
|