|
திருப்புத்தூர் - கல்லல் இடையே ரோடு தேவை May 9, 10 |
|
திருப்புத்தூரில் இருந்து கல்லலுக்கு நேரடியாக ரோடு வசதி ஏற்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
திருப்புத்தூரில் இருந்து கண்டரமாணிக்கம், ஆலங்குடி, செம்பனூர் வழியாக கல்லலுக்கு 24 கி.மீ., வரை சுற்றி செல்லவேண்டியுள்ளது. இதற்க மாற்றாக, கண்டரமாணிக்கம், பொன்னாங்குடி, கள்ளிப்பட்டு, புரண்டி வழியாக எளிதில் கல்லல் செல்லும் வகையில் புதிய பாதையை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.
இவ்வழியே ரோடு அமைந்தால், 8 கி.மீ., தூரம் சுற்றிச்செல்வது குறையும். அதிகாரிகளின் மெத்தனத்தால், பணி கிடப்பில் உள்ளது. இந்த வழியே ரோடு வசதி ஏற்படுத்தினால், திருப்புத்தூர் பயணிகள், கல்லல் சென்று வர ஏதுவாக அமையும். இந்த வழியாக ரோடு அமைக்கப்பட்டால், ரயிலுக்கு செல்பவர்கள் எளிதில் கல்லல் நோக்கி சென்று விடலாம். திருப் புத்தூர் - கல்லல் இடையே உள்ள கிராமத்தினர் மதுரை, திருச்சி செல்ல இந்த ரோடு முக்கிய போக்குவரத்தாக அமையும். இங்குரோடு அமைக்க வேண்டும்.
source : Dinamalar |
|
|
|
|
|