|
திருப்புத்துார் - சென்னைக்கு கூடுதல் அரசு பஸ்கள் தேவை Jul 22, 19 |
|
திருப்புத்துாரில் இருந்து சென்னைக்கு அரசு கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைக்கின்றனர்.
பயணிகள் அனைவரும் அரசு பஸ்கள் மூலமே செல்கின்றனர். இங்கிருந்து ஏற்கனவே 2 அரசு பஸ்கள் நேரடியாக சென்னைக்கு இயக்கப்பட்டன. ஆனால் தற்போது காரைக்குடி - சென்னை பஸ் திருப்புத்துார் வழியாக இயக்கப்படுகின்றன. சிவகங்கை, பரமக்குடியில் இருந்து வரும் பஸ்கள் மூலமும் பயணிகள் செல்கின்றனர். அந்த பஸ்கள் அனைத்தும் நிரம்பி விடுவதால், சீட் கிடைக்காமல் திருப்புத்துார் பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர். எனவே திருப்புத்துார் மற்றும் சுற்றுப்புற கிராமத்தினர் சென்னை செல்ல ஏதுவாக, இங்கிருந்து நேரடியாக சென்னைக்கு பஸ்களை இயக்க அரசு முன்வரவேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
|
|
|
|
|