|
NEWS REPORT: நகரத்தார்கள் வர்த்தக மாநாட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் Jul 22, 19 |
|
|
|
நகரத்தார் வர்த்தக சபை சார்பில் 4-வது ‘உலக நகரத்தார்கள் வர்த்தக மாநாடு’ தொடக்க விழா சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று நடைபெற்றது.
சபையின் தலைவர் வெங்கட் அண்ணாமலை மாநாட்டுக்கு தலைமை தாங்கினார். இரண்டு நாள் நடைபெறும் இந்த மாநாட்டில் வணிகத் தலைவர்கள் பலர் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மாநாட்டை தொடங்கி வைத்தார்.
மாநாட்டில் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:
தென்கிழக்கு ஆசியாவில் பல பகுதிகளில் அந்த நாட்டின் சின்னங் கள், கலாச்சாரங்கள் நகரத்தார் மூலம் உருவாக்கப்படுகிறது. தஞ்சாவூர் கோயில் போன்று தென் கிழக்கு ஆசியாவில் பல கோயில்கள் பிரமாண்டமாக உள்ளன. காசி விஸ்வநாதர் கோயிலை புனரமைத்தது நகரத்தார்தான். நகரத்தாருக்கு தலை வணங்குகிறேன்.
தொழில் செய்ய அரசு என்ன உதவி செய்தது என்பதைப் பற்றி பேசுவதைவிட, அரசுடன் இணைந்து முறையான பயிற்சியை மேற்கொள்வதே சிறந்தது. இந்திய வளர்ச்சிக்கு இளைஞர்கள் தொழில் செய்வது முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இந்த பட்ஜெட்டில் தொழில் முறைவோருக்கு அதிக பயன்கள் இடம்பெற்றுள்ளன.
இவ்வாறு அவர் தெரிவித்தார். |
|
|
|
|
|