|
நகரத்தார்கள் முயற்சியால் கல்லலில் துார் வாரும் பணி Jul 23, 19 |
|
கல்லலில் மக்கள் குளிக்க பயன்படுத்தும் கண்டார்குழி ஊரணி நகரத்தார்கள் முயற்சியால் துார் வாரும் பணி துவங்கியுள்ளது.கல்லலில் உள்ள சின்ன ஊரணி என்றழைக்கப்படும் கண்டார்குழி ஊரணி கிராமத்து மக்கள் குளிப்பதற்கு பயன்பாட்டில் இருந்து வந்தது. கடந்த சில வருடங்களாக மழை பொய்த்ததாலும், வரத்து கால்வாய் அடைபட்டதாலும் செடிகள் வளர்ந்து நீர் இன்றி வறண்டு போனது.கிராம மக்களே ஊரணி கண்மாய்களை துார்வாரலாம் என்ற அரசின் உத்தரவை தொடர்ந்து துார்வாரும் பணிக்கு கலெக்டரிடம் அனுமதி பெற்று காரைக்குடி தாசில்தார் பாலாஜி ,மண்டல துணை தாசில்தார் சகாயராஜ், கல்லல் ஆர்.ஐ., சற்குணாதேவி, வி.ஏ.ஒ., ஜெகஜோதி பணியை துவக்கி வைத்தனர்.
ஏற்பாடுகளை சுப.ஐயப்பன், மதியழகன் மற்றும் எஸ்.எல்.பி. கண.சரவணன் செய்திருந்தனர். |
|
|
|
|
|