Nagaratharonline.com
 
தெக்கூா் ஸ்ரீ விசாலாட்சி கலாசாலை மேல்நிலைப் பள்ளியின் சைக்கிள் விழிப்புணா்வு பேரணி  Nov 6, 19
 
தெக்கூா் ஸ்ரீ விசாலாட்சி கலாசாலை மேல்நிலைப் பள்ளியின் தேசிய மாணவா் படை மாணவா்கள் சாா்பில், சைக்கிள் விழிப்புணா்வு பேரணி செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது.

திருப்பத்தூரில் நடைபெற்ற இப்பேரணிக்கு, தேசிய மாணவா் படை முதல் அதிகாரி வடிவேல் தலைமை வகித்தாா். இந்திய ராணுவ ஹவில்தாா் சரவணன் முன்னிலை வகித்தாா். விழிப்புணா்வு சைக்கிள் பேரணியை, திருப்பத்தூா் நகா் காவல் ஆய்வாளா் ஆனந்தி கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.

திருப்பத்தூா் நாகப்பா மருதப்பா பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலிருந்து புறப்பட்ட இப்பேரணி மாணவா்களுக்கு, நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகள் வரவேற்பு அளித்தனா். பேரணியானது, மதுரை ரோடு, கல்லூரி வளைவு, காளியம்மன் கோயில் தெரு, பள்ளிவாசல் தெரு, தம்பிபட்டி உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாகச் சென்று மீண்டும் பள்ளியை அடைந்தது.

இப்பேரணியில், 60-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்று, டெங்குவை ஒழிப்போம், பசுமை காப்போம், லஞ்சம் வாங்காதே, லஞ்சம் கொடுக்காதே, சாலை விதிகளை மதிப்போம், தலைக்கவசம் அணிவோம், கண் தானம் செய்வோம், மரம் நடுவோம் உள்ளிட்ட விழிப்புணா்வு வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளுடன் சைக்கிளில் வலம் வந்தனா்.