|
காரைக்குடி கொப்புடைய நாயகி அம்மன் கோயில் பெருந்திருவிழா இன்று தொடக்கம் May 12, 10 |
|
காரைக்குடி, மே 10: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருள்மிகு கொப்புடைய நாயகி அம்மன் கோயில் செவ்வாய்ப் பெருந்திருவிழா செவ்வாய்க்கிழமை ( மே 11) மாலை காப்புக்கட்டுதலுடன் தொடங்குகிறது. மே 18-ல் தேரோட்டம் நடைபெறுகிறது.
இந்த ஆண்டு செவ்வாய்க்கிழமை மாலை 6.26 மணிக்கு மேல் காப்புக்கட்டுதலுடன் விழாத் தொடங்குகிறது. அன்று இரவு அம்மன் வெள்ளி சிம்ம வாகனத்தில் எழுந்தருளும் திரு வீதியுலா நடைபெறுகிறது.
அதைத்தொடர்ந்து புதன்கிழமை (மே 12) காமதேனு வாகனத்திலும், வியாழக்கிழமை (மே 13) அன்ன வாகனத்திலும், வெள்ளிக்கிழமை (மே 14) கைலாச வாகனத்திலும், சனிக்கிழமை (மே 15) வெள்ளி ரதத்திலும், ஞாயிற்றுக் கிழமை (மே 16) வெள்ளி ரிஷப வாகனத்திலும், திங்கள்கிழமை (மே 17) வெள்ளிக்குதிரை வாகனத்திலும் அம்மன் எழுந்தருளும் திருவீதியுலா நடைபெறும்.
நாள் தோறும் காலை நேரத்தில் வெள்ளிக்கேடகத்தில் அம்பாள் புறப்பாடும் பக்தி உலாவும் நடைபெறும்.
எட்டாம் திருநாளான செவ்வாய்க்கிழமை (மே 18) தேரோட்டத்தையொட்டி காலை 7.45 மணிக்கு மேல் 8.45 மணிக்குள் திருத்தேருக்கு அம்மன் எழுந்தருளும் நிகழ்ச்சி யும், மாலை 5 மணிக்கு பக்தர்கள் திருத்தேர் வடம்பிடித்தல் நிகழ்ச்சியும், அதைத் தொடர்ந்து தேரோட்டம் நடைபெற்று இரவு அருள்மிகு காட்டம்மன் கோயிலுக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெறும்.
புதன்கிழமை (மே19) தேர் கொப்புடையம்மன் கோயிலுக்குத் திரும்புதலும், வியாக்கிழமை (மே 20) இரவு தெப்பத்திருவிழாவும் நடைபெற்று விழா நிறைவடைகிறது.
விழா ஏற்பாடுகளை தக்கார் சி.செல்வராஜ், செயல் அலுவலர் எம்.பூமிநாதன் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
Article Source:DInamani |
|
|
|
|
|