|
திருக்கோஷ்டியூரில் பிப்.7ல் திருக்கல்யாண மகோத்ஸவம் Feb 2, 20 |
|
திருக்கோஷ்டியூர் பெருமாள் கோயிலில் சவுமியநாராயணப்பெருமாள் -- கோதை நாச்சியார் திருமண மகோத்ஸவம் பிப்.,7ல் துவங்குகிறது.
சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் தைலக்காப்பு திருக்கல்யாண மகோத்ஸவம் 5 நாட்கள் நடைபெறும்.பிப்.,7 மாலையில் ஆண்டாள் பெரிய சன்னதியில் எழுந்தருளலும்,பெரிய பெருமாளிடம் பிரியாவிடை பெறுதலுடன் உத்ஸவம் துவங்குகிறது.தொடர்ந்து இரண்டாம் நாளில் தைலக்காப்பு மண்டபத்திற்கு ஆண்டாள் எழுந்தருளலும்,நவகலச அலங்கார சவுரித் திருமஞ்சனம் நடைபெறும்.3ம் நாளில் ஆண்டாள் உச்சிக்கொண்டை சேவை,கோதை நாச்சியாரை கடாஷித்தலும், 4ம் நாளில் முத்துக்குறி பார்த்தலும்,பிப்.,11ல் 5ம் நாளன்று இரவு 7:36 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெறும். |
|
|
|
|
|