Nagaratharonline.com
 
நாட்டரசன்கோட்டையில் குரங்கு, நாய்கள் தொல்லை  Feb 2, 20
 
நாட்டரசன்கோட்டையில் குரங்கு, நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதால், மக்கள் அச்சத்துடன் நடமாடுவதாக புகார் எழுந்துள்ளது.நாட்டரசன்கோட்டை பேரூராட்சியிலுள்ள 12 வார்டுகளில் 7 ஆயிரம் பேர் வசிக்கின்றனர்.


இது தவிர சுற்றுலா பயணிகளும் அதிகம் வருகின்றனர். இங்கு, பெரும்பாலான வீடுகள் பூட்டியே கிடப்பதால், அந்த வீடுகளில் குரங்குகள் தங்கி, அருகில் உள்ள வீட்டில் புகுந்து, உணவு பாத்திரங்களை எடுத்து கொண்டு ஓடி விடுகிறது. உணவை பாதுகாக்க முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். அதேபோன்று நகரில் தெருவிற்கு 10 க்கும் மேற்பட்ட நாய்கள் என நாட்டரசன்கோட்டையில் நுாற்றுக்கணக்கான நாய்கள் திரிகின்றன. இவற்றை பிடிக்க பேரூராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நடந்து, வாகனங்களில் செல்வோரை நாய்கள் விரட்டி கடிக்கின்றன. மாவட்ட நிர்வாகம், சுற்றுலா நகரில் திரியும் குரங்கு, நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.